Print this page

C.I.D.திரு.காந்தியின் தீண்டாமையின் திருகணி வியாக்கியானம். குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 21.06.1931 

Rate this item
(0 votes)

 

உயர் திரு காந்தியவர்களை ஒரு தென்னாட்டுப் பார்ப்பனர் ஒருவர் தீண்டாமையைப் பற்றி சந்தேகம் தெரிவிக்குமாறு ஒரு கடிதம் எழுதி இருந் தார். அதற்கு பதிலாக திரு. காந்தி எழுதி இருப்பதில் காணும் குறிப்பாவது, 

தீண்டாமை விஷயமான காங்கிரஸ் தீர்மானங்கள் இன்னும் அரசியல் திட்டத்தில் ஒன்றாக நிருவப்படவில்லை. அதாவது நான் சொல்லுவதுதானே ஒழிய இன்னமும், அரசியல் கொள்கையாக ஒப்புக்கொள்ளவில்லை பார்) அப்படி நிறுவப்பட்டாலும் நீதிஸ்தலங்கள் அதாவது கோர்ட்டுகள்) இவற்றை கவனித்துக்கொள்ளும். வேதங்களினுடையவும் சாஸ்திரங்களினுடையவும் கட்டளைகளை புறக்கணிக்கப்படமாட்டாது. அதாவது அவைகளுக்கு விறோதமாக ஒன்றும் செய்யப்படமாட்டாது. ப-ர்) காங்கிரஸ் அமைப்பு போது மான அளவு விரிவுள்ளதாகவே இருக்கின்றது. (அதாவது எப்படி வேண்டு மானாலும் வியாக்கியானம் செய்து கொள்ள தகுதியாகவே இருக்கின்றது. 

குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 21.06.1931

 
Read 39 times